செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (20:44 IST)

பேனருக்கு பதிலாக ’ஹெல்மெட்’ வழங்கிய சூர்யா ரசிகர்கள்!

பேனருக்கு பதிலாக ’ஹெல்மெட்’ வழங்கிய சூர்யா ரசிகர்கள்!
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், நடிகர், சூர்யா, மோகன் லால், ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் காப்பான். இந்தப் படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காப்பான் படத்தை முன்னிட்டு,பேனர் வைப்பதற்கு பதிலாக , பொதுமக்கள் 200 பேருக்கு சூர்யா ரசிகர்கள் ஹெல்மெட் வழங்கியுள்ளனர்.
 
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்ததை அடுத்து, பல்வேறு தரப்பினர் தங்கள் சார்பில் பேனர் வைக்க வேண்டாமென கூறியுள்ளனர்.
பேனருக்கு பதிலாக ’ஹெல்மெட்’ வழங்கிய சூர்யா ரசிகர்கள்!
இந்த நிலையில் காப்பான் படம் இன்று வெளியானதையொட்டி, கட் அவுட் பேனர் வைப்பதற்கு பதிலாக சூர்யா ரசிகர்கள் ஹெல்மெட் வழங்கினர். இதை, துணைகமிஷனர் சரவணன் 200 பேருக்கு வழங்கினார். 
 
சூர்யா ரசிகர்களின் இந்த புதிய முயற்சியை பலரும் பாரட்டியுள்ளனர்.