செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (17:57 IST)

சுபஸ்ரீ என்கின்ற சகோதரியின் இழப்பு வேதனை...அஜித் ரசிகர்கள் உறுதிமொழி

சென்னை, பள்ளிக் கரணையில் பேனர் விழுந்ததால், லாரியில் மோதி உயிரிழந்த சுபஸ்ரீயின் இறப்புக்கு பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, சாலையில் பேனர் வைக்கமாட்டோம் என அரசியல் கட்சியினர் தெரிவித்ததனர். இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களும் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என உறுதுமொழி எடுத்துள்ளதாக வெளியிட்டுள்ள  போஸ்டர் வைரலாகிவருகிறது.
சென்னை பள்ளிகரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  
 
இந்த விபத்து குறித்து, லாரி ஓட்டுநர் மனோஜ் என்பரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த பேனரை அச்சிட்ட அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
 
சுபஸ்ரீயின் மரணத்தால் அரசியல் கட்சி தலைவர்கள் இனி பேனர் வைக்க கூடாது என தங்களது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், சினிமாதுறையினருக்கும் பேனர் வைப்பதில் சமூக பொறுப்புடைமை வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், மதுரையில் உள்ள  நடிகர் அஜித்தின் ரசிகர்கள் இனிபொது இடங்களில்  பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். 
அதில், சுபஸ்ரீ என்கின்ற சகோதரியின் இழப்பு மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னால் நாம் சிந்தித்து செயல்பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகின்றது. இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோ. 
 
மேலும், அஜித் படங்களுக்கு அவர் புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களிலும் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கின்றோம் - மனிதகடவுள் அஜித் பக்தர்கள் மதுரை ‘’ இவ்வாறு அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த உறுதிமொழிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர்.