திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (13:24 IST)

கமல் இல்லாமல் ‘இந்தியன் 2’ படத்தின் இரண்டாவது பூஜை; வைரல் புகைப்படங்கள்!

indian 2 pooja
கமல் இல்லாமல் ‘இந்தியன் 2’ படத்தின் இரண்டாவது பூஜை; வைரல் புகைப்படங்கள்!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கும் போது பூஜை போடப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இரண்டாவது பூஜை நடத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாமல் இந்த பூஜை நடைபெற்றது. இருப்பினும் இந்த பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் லைக்கா நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நிர்வாகிகள் இந்த பூஜையில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்று குறிப்பிட்டது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை கைப்பற்றிய பிறகு நடைபெறும் பூஜை என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது