திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (12:27 IST)

இந்தியன் 2-ல் விவேக்கிற்கு பதில் இவர்? காமெடி பண்ணுவாரா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Indian 2
இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விவேக்கிற்கு பதிலாக காமெடியனாக வேறொரு நடிகர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து பெரும் ஹிட் ஆன படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் திட்டமிட்ட நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2019ம் ஆண்டில் ஷூட்டிங் பணிகள் தொடங்கப்பட்டன.

இடையே படப்பிடிப்பில் விபத்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் தான் நடிக்கும் முதல் படம் என இந்தியன் 2 குறித்து நடிகர் விவேக் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் முன்னரே நடிகர் விவேக் காலமானார்.

தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் லைகாவுடன் இணைந்து தயாரித்து முடிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று பூஜை செய்யப்பட்டு படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் விவேக் மறைந்துவிட்ட நிலையில் விவேக்கின் ஆசை கனவாகவே முடிந்துவிட்டது. அதேசமயம் அவருக்கு பதிலாக யார் அந்த கதாப்பாத்திரத்தை நடிப்பார் என்ற கேள்வி இருந்து வந்தது.
Guru somasundaram

இந்நிலையில் நடிகர் குரு சோமசுந்தரம் விவேக்கிற்கு பதிலாக அந்த ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரண்ய காண்டம், ஜோக்கர் படங்களில் காமெடி செய்த குரு சோமசுந்தரம் மலையாள படமான மின்னல் முரளி உள்ளிட்ட சமீபத்திய சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். விவேக்கிற்கு இணையாக குரு சோமசுந்தரம் காமெடி காட்சிகளை பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.