தொடர்புடைய செய்திகள்
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது: வேங்கை வயல் மக்கள் மனு..!
- வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?
- பயிற்சியாளர் கைது இல்லை.. கபடி வீராங்கனைகள் தமிழகம் திரும்ப ஏற்பாடு: தமிழக அரசு விளக்கம்..!
- பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!
- தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கபடி விளையாடிய போது திடீரென சுருண்டு விழுந்தவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!
புதுக்கோட்டை மாவட்டம், பிச்சாந்தன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு கபடி வீரர் விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவ கணேஷ் என்பவர் பள்ளியில் சிலம்பம் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கபடி விளையாடுவதில் அதிக ஆர்வம் இருந்தது.
இந்த நிலையில், திருப்பத்தூர் அருகே நேற்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. அந்த போட்டியில், சிவகங்கை அணிக்காக விளையாடிய சிவ கணேஷ், விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் வந்ததாக தெரிவித்தார்.
உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர். 54 வயதான சிவ கணேஷின் திடீர் மரணம் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
