திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:58 IST)

“வாரிசு நடிகர்களுக்கு இருக்கும் கூடுதல் பொறுப்பு…” அதிதி ஷங்கர் குறித்து அருண் விஜய்

நடிகை அதிதி ஷங்கர் அடுத்தடுத்து கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களோடு நடித்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.  ஆனால் இயக்குனர் ஷங்கரின் வாரிசு என்பதனால்தான் அவருக்கு தொடர்ந்து இதுபோல பெரிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது என விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுபற்றி பிரபல நடிகரான அருண் விஜய்யிடம் கேட்கப்பட்ட போது “சினிமாவில் எந்த இடத்திலும் நான் அப்பாவின் பெயரைப் பயன்படுத்தியது இல்லை. என்னுடைய திறமையால் மட்டுமே நான் உயர்ந்தேன். மேலும் வாரிசுகள் என்பதால் தந்தைகளின் பெயரைக் காப்பாற்ற வேண்டிய கூடுதல் பொறுப்பும் உள்ளது. வாரிசுகளுக்கு சுலபமாக வாய்ப்புகள் கிடைத்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தால்தான் மட்டுமே படத்தை பார்ப்பார்கள். அதிதி ஷங்கருக்கு பல திறமைகள் உள்ளன. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.