1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified புதன், 24 ஆகஸ்ட் 2022 (08:16 IST)

’இந்தியன் 2’ படத்தை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட்: புதிய போஸ்டர் ரிலீஸ்!

indian 2 redgiant
’இந்தியன் 2’ படத்தை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட்: புதிய போஸ்டர் ரிலீஸ்!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிறுவனர் உதயநிதி ஸ்டாலினின் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டரில் லைக்கா மற்றும் ரெட்ஜெயன்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் மொத்த தயாரிப்பையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இந்தியன் 2  படத்தின் புதிய போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் மீண்டும் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது.