திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (11:05 IST)

பிக்பாஸ் வீட்டில் இந்த வார குடும்ப தலைவரான வையாபுரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இந்த வார குடும்ப தலைவராக வையாபுரி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கணேஷ், சிநேகன், வையாபுரியின் சட்டையில், குடும்பத்தில் உள்ளவர்கள் சிகப்பு, பச்சை நிற ஸ்டார்களை குத்தி  தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

 
பச்சை மற்றும் சிகப்பு நிற ஸ்டார் அணிவித்தல் அவரிடம் உள்ள கெட்ட மற்றும் நல்ல குணத்தையும் பற்றி கூறினர். இதில் அதிக பச்சை ஸ்டார் பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் வையாபுரி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
கெளரவ வேடத்திற்கு மீண்டும் பிக்பாஸ் குடும்பத்தில் சென்ற ஜூலி, ஆர்த்தி, சக்தி ஆகியோர் சேர்ந்து மற்ற போட்டியாளருக்கு  விருதை வழங்கும் நிகழ்ச்சி நடத்தினர். பிக்பாஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு விதத்தில் சிநேகனை வெறுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும்  நாட்களில் பிரச்சனைகள் வெடிக்கக் கூடும் என்று தெரிகிறது.