ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2017 (15:35 IST)

எதிர்காலத்தை பொய்த்துவிட்டு... இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்: கமல் (ப்ரொமோ)

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது பற்றி சினிமா பிரபலங்கள் பலரும்  ட்விட்டரில் தங்கள் இரங்கலை பகிர்ந்து வருகிறார்கள். இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே மிகவும் சோகத்தில்  ஆழ்த்தியிருக்கிறது.

 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல், வார இறுதியில் பேசும்போது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் மட்டுமல்லாது பொதுவெளியில் நடக்கும் பிரச்சனைகளையும் சூசகமாக சொல்வார்.
 
தற்போது வந்துள்ள ப்ரொமோவில், நீட் தேர்வுக்கெதிராக போராடி தோல்வியடைந்த மாணவி அனிதாவின் தற்கொலை பற்றி பேசுகிறார் கமல். இவர் தனது வருத்தத்தையும், அரசின் மீதான கண்டனத்தையும் ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதில், எதிர்காலத்தை பொய்த்துவிட்டு... இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்... என்றும், இதுகுறித்து இன்றைய  நிகழ்ச்சியில் விரிவாக பேசுவோம் என்கிறார்.