1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (11:11 IST)

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பிய சக்தி; விருது வாங்கும் போட்டியாளர்கள் - ப்ரொமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்த சினேகன், ஆரவ், காஜல் ஆகியோரில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற நிலையில், இந்த வாரத்தில் காஜல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்க முன்னாள் போட்டியாளர் சக்தியை கமல்  அனுப்பி வைத்தார். சக்தி வீட்டில் நுழைந்த நிலையில், அங்கு வந்த சில முகமுடி அணிந்தவர்கள், ஆரவை கைது செய்து  அழைத்து சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரவை அனுப்பிவைத்தனர். 
 
இந்நிலையில் தற்போது வந்த புதிய புரொமோவில் விருது கொடுக்கும் விளையாட்டு நடந்தது. அதில் ஜுலி நாடகக்காறி என்ற  விருதை சுஜாவிற்கு கொடுக்க, வாங்கிப்கொண்ட சுஜா இந்த விருதை ஒரு பெரிய நாடகக்காறியிடம் இருந்து பெறுவது சந்தோஷம் என்கிறார்.
 
சக்தி தந்திரகாரன் என்ற விருதை சினேகனுக்கு கொடுப்பதாக தெரிகிறது. இறுதியில் சினேகன் என்னை விமர்சிக்க என்னை  தவிர யாருக்கும் உரிமை இல்லை என்று கூறுகிறார். இந்நிலையில் இதனை பார்க்கும்போது பெரிய பிரச்சனை உண்டு  என்பதுபோல் தெரிகிறது.