1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (15:32 IST)

ஜூலிக்கும் சிநேகனுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம்; பரபரப்பான பிக்பாஸ் வீடு - வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிநேகன், ஆரவ் காப்பற்றப்பட்ட நிலையில் காஜல் வெளியேற்றப்பட்டார். இதற்கு பதிலாக வைல்டு கார்டு முறையில் சக்தி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவரின் வருகையால் சிநேகனும், ஜூலியும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
ஏற்கனவே சக்தி பேசுகையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால் இரண்டு பேரை ட்ரிக்கர் பண்ண வேண்டி உள்ளது என்று கூறி இருந்தார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சக்தி வருகையால் பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் பரபரப்பானது. ஜூலி ரீ எண்ட்ரி கொடுத்த நாள் முதலே ஏதோ மாற்றம் இருப்பதாக கூறிவரும் சிநேகன், அப்ப பார்த்த ஜூலி இப்ப இல்லையே என்று  கூறினார். 
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில் ஜூலிக்கும் சினேகனுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அதில், ஏன் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்க மாட்றீங்க? ஜூலி வந்து அவர்களுக்குள் ஒருவராக யாருமே பார்க்கவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. நீங்க எல்லோரும் எனக்கு பின்னாடி பேசியதை படம் போட்டு காட்டும்போது என் நிலை என்ன தெரியுமா?
 
மேலும் இதை பற்றி பேசிகையில், ஜூலி எனக்கு வெளியில இன்னொரு பேர் இருக்கு.. என்று சொன்னதும் நடுவில் குறுக்கிட்ட  சிநேகனிடம், வெயிட் வெயிட்.. அந்த பெயர் போலி! அந்த பேரை ஆரம்பிச்சு வைத்ததே நீங்கதான். என்று சொன்னதும் பதில் கூற முடியாமல் திணறினார் சிநேகன்.