செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (12:06 IST)

பாம்பு தன்னுடைய சட்டையை மாற்றும், ஆனால் பாம்பு, பாம்புதானே: ஆர்த்தி பேச்சு - வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜுலி மற்றும் ஆர்த்தி மீண்டும் ரீ எண்ட்ரியை அடுத்து கலகலப்பும் உண்டு. அதே சமயம் பிரச்சனைகளுக்கும் பஞ்சம் இல்லை. ஆர்த்தி நிகழ்ச்சி முன்பு இருந்தது போல் தன்னுடைய குணத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஜுலி முற்றிலுமாக மாறி, புது பாடம் கற்று அதனை வெளிப்படுத்தி வருகிறார்.

 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில் ஜூலி, ஓவியா மற்றும் பரணி பற்றி ஹரிஷ்  கல்யாணிடம் மனம் திறந்து பேசுகிறார். அதேபோல் ஆர்த்தி, சுஜா வருணியிடம் ஒரு பாம்பு தன்னுடைய சட்டையை  வேண்டுமானால் மாற்றும், ஆனால் பாம்பு, பாம்புதானே என்று ஜுலியை பற்றி விமர்சனம் செய்கிறார்.
 
ஜூலிக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு வர காரணம் அவர் நடந்து கொள்ளும் விதம்தான். ஆர்த்தியும், ஜூலியும் ரீ எண்ட்ரி கொடுத்தாலும் இருவரும் மோதிக்கொள்வது மட்டும் மாறவில்லை.