1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (12:04 IST)

நட்சத்திர ஓட்டலில் கைதான பிரபல நடிகைகள்; வைரலாகும் வீடியோ

ஐதராபாத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போலீஸார் நடத்திய சோதனையில், மும்பையைச் சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு தொலைக்காட்சி நடிகையையும் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு  இருந்த மும்பையைச் சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகையை கைது செய்துள்ளனர். ஆனால் அந்த  பாலிவுட் நடிகைகளின் பெயரோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அது பற்றி விசாரணை நடந்து வருவதாக  போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நடிகை ரிச்சா சக்சேனா என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இவர் தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறார். 
 
இந்நிலையில் இந்த நடிகைகளோடு இரண்டு புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர்  பாலிவுட், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களுக்கு துணை நடிகர் ஏஜெண்ட் மோனிஷ் கடாகியா, மற்றும் டி.வெங்கட்ராவ்  ஆகியோர் ஆவர். அவர்களிடமிருந்து ரூ. 55 ஆயிரம் மற்றும் 3 மொபைல் போன்கள் கைபற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. மேலும் 5 நட்சத்திர ஓட்டலின் மேனேஜரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் போலீசாரிடம் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: TV9 NOW