நாகையில் எச்.ராஜா உள்ளிட்ட 100 பாஜகவினர் கைது
சமீபத்தில் சீர்காழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பாஜகவினர்களை தாக்கியதாக கூறப்பட்ட சம்பவத்திற்கு திருமாவளவனுக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று மாலை நாகையில் உள்ள அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்திருந்தார்
ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி திட்டமிட்டபடி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எச்.ராஜா தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் இன்று மாலை சுமார் 100 பாஜக தொண்டர்களுடன் எச்.ராஜா வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை வழிமறித்த நாகை போலீசார் எச்.ராஜாவையும் அவருடன் வந்த 100 தொண்டர்களையும் கைது செய்தனர்.
கைதுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, 'பாஜகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த நாகை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகிய வன்முறை சக்திகளுக்கு பயந்து காவல்துறை தொடை நடுங்கிளாக உள்ளனர். ஜனநாயக உரிமையை மறுக்கப்பட்டதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறினார்