1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (15:27 IST)

4 வயது சிறுமி பலாத்கார கொலை: 17 வயது காமுகன் கைது!

திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை 17 வயது பையன் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனை செய்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
திண்டுக்கல் அய்யலூர் கொம்பேறிப்பட்டியை சேர்ந்த தம்பதிகளுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தையை அதன் பாட்டி ரேசன் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வழியில் அந்த ஊரைச்சேர்ந்த ராஜ்குமார் என்ற 17 வயது பையன் இருச்சக்கர வாகனத்தில் வந்துள்ளான்.
 
அவனிடம் அந்த 4 வயது சிறுமியை அங்கன்வாடி மையத்தில் விட்டுவிடுமாறு கூறியுள்ளார் சிறுமியின் பாட்டி. ஆனால் ராஜ்குமார் அந்த சிறுமியை அங்கன்வாடி மையத்தில் விடாமல் கிணத்துபட்டி அருகே உள்ள மலைப்பகுதியில் அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான்.
 
அதன் பின்னர் சிறுமி அணிந்திருந்து தோடு, கொலுசு போன்றவற்றை எடுத்துக்கொண்டு, அந்த சிறுமியின் உடலின் மீது கற்களை அடுக்கி வைத்துவிட்டு சென்றுள்ளான். குழந்தையை காணவில்லை என உறவினரும், பெற்றோரும் தேட ஆரம்பித்த பின்னர் அங்கு சுற்றிக்கொண்டிருந்த ராஜ்குமாரை பிடித்து விசாரித்தபோது குழந்தையை விற்றுவிட்டதாக கூறினார்.
 
மேலும் ராஜ்குமார் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் அவனை அடித்து உதைத்து வடமதுரை காவல் துரையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையின் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ராஜ்குமார் சிறுமியின் உடல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டியுள்ளான். இதே சிறுவன் மீது மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன. ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வந்துள்ளான்.