1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (12:33 IST)

அயன் பட பாணியில் போதை பொருள் கடத்திய வாலிபர் கைது

‘அயன்’ பட பாணியில் வயிற்றில் மறைத்து ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்தி வந்த வெனிசுலா நாட்டை சேர்ந்த வாலிபர்  கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வெனிசுலா நாட்டை சேர்ந்த இளைஞர் கார்லி சபரியேல் காஸ்போ(36) வந்தார். அந்த வாலிபரின் நடையில் வித்தியாசம் தெரியவே, விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே, விமான நிலைய அதிகாரிகள் அவரை  சோதனைக்கு உட்படுத்தினர். சோதனையின் முடிவில், வாலிபர் போதைப் பொருளை வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
 
அயன் பட பாணியில் அந்த வாலிபரின் வயிற்றில் கடத்தி வரப்பட்டது, 1 கிலோ கொக்கேன் என்னும் போதை பொருள் எனவும் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.5 கோடி என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.