புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (18:08 IST)

வித்தியாசமான கெட்டப்பில் இணையத்தில் வைரலாகும் டிடியின் புகைப்படம்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அதிக ரசிகர்களை பெற்றுள்ள டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.  சின்னத்திரையிலிருந்து பவர் பாண்டி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து கலக்க ஆரம்பித்துவிட்டார்.

 
மாதவன் நடித்த நளதமயந்தி உள்பட ஒரு சில படங்களில் நடித்திருந்தார். படத்தில் சின்னதாக ஒரு ரோல் பண்ணியிருந்தாலும்  பலரும் பாராட்டும் வகையில் அவரது நடிப்பு இருப்பது பாராட்டுதலுக்குறியது.
 
இந்த நிலையில், தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம்  படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத வகையில், வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.