திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி என பன்முக கதாப்பாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. தற்போது ஜீவா - ஆக்ஷன் கிங் அர்ஜூன் கூட்டணியில் அகத்தியா என்ற படத்தில் நடித்தார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்ஸ் தயாரித்த இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்கினார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் நல்ல விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த படம் பிப்ரவரி 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் பெரியளவில் ரசிகர்களை இந்தப் படம் கவரவில்லை. ஜீவாவின் தோல்விப் படங்களில் ஒன்றாக இணைந்தது. இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இந்த படம் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.