ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 மார்ச் 2025 (08:16 IST)

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆக இருந்தது. இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் எனவும் பின்னர் முதல் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தைக் கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஷிபு தமீம்ஸ் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம்மை வைத்து ‘இருமுகன்’ மற்றும் ‘சாமி2’ ஆகிய படங்களைத் தயாரித்து அதில் பெரிய நஷ்டத்தை சந்தித்தவர். இந்நிலையில் தற்போது வீர தீர சூரன் படத்தில் முதலீடு செய்திருந்த B4U என்ற நிறுவனத்துக்கு அவர் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும் அதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை ரிலீஸ் செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதனால் இன்று திரையிட இருந்த முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை வழக்கு விசாரணை நடந்து இது சம்மந்தமாக தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.