1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified புதன், 24 மே 2023 (19:31 IST)

''அந்த நடிகரால் பல கஷ்டங்களை சந்தித்தேன்''- நடிகை ஹன்சிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்  ஹன்சிகா மோத்வானி. இவர், விஜய்யுடன் இணைந்து வேலாயுதம், எங்கேயும் காதல், சிம்புவுடன் இணைந்து வாலு,   சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவரது 50 வது படமான   மஹா என்ற படம் வெளியானது. இந்த நிலையில், தன் நீண்ட  நாள் காதலரான சோஹேல் கதுரியாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்த  நிலையில், கடந்தாண்டு டிசம்பர்  ஆம் தேதி தன் காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''என் திரைப்பட வாழ்க்கையில் ஒரு நடிகரால் நான் பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்தேன். அப்போது நான் சினிமாவிற்கு வந்த புதிது. நான் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டுமென வந்த அனைத்து கஷ்டங்களையும் எனக்கு கொடுத்தார்.

அவருடன் நான் டேட்டிங் சென்றபோது எனக்கு தொல்லைகள் கொடுத்தார். அவரால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். அந்த நடிகரின் பெயரை கூற விரும்பவில்லை'' என்று கூறியுள்ளார்.

நடிகை ஹன்சிகாவின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.