புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 24 மே 2023 (12:15 IST)

பிச்சைக்காரன்3 படம் வருவது உறுதி… விஜய் ஆண்டனி தகவல்!

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் பிச்சைக்காரன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான “பிச்சைக்காரன் 2” வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்து, நடித்தும் உள்ளார்.

படம் வெளியானது முதல் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளதுடன், வெற்றிகரமாக வசூல் செய்தும் வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை குறித்து பேசியுள்ள விஜய் ஆண்டனி “சமீப காலமாக க்ரிஞ்ச் என்று சொல்லி பல விஷயங்களை நாம் மறக்கிறோம். வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான பிணைப்புக்காகதான் பலரும் ஏங்குகின்றனர். ஆனால் அந்த உணர்வை பலரும் க்ரிஞ்ச் என கூறிவிடுகின்றனர்.

இந்நிலையில் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கிவருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் 3 நாட்லளீல் 18 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.  இது மிகப்பெரிய வசூலாக பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியை அடுத்து பிச்சைக்காரன் படத்தின் 3 ஆம் பாகம் எடுக்கப்படுவது உறுதி என நடிகரும் இயக்குனருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார். ஆனால் அந்த படம் 2025 ஆம் ஆண்டுதான் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம், கொலை உள்ளிட்ட படங்கள் முடிந்து இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.