திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (22:44 IST)

’’விஜய் 68’’ படத்தில் பிரபல நடிகர் வில்லன் ?

vijay68
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் சென்னை -28, மங்காத்தா, மாநாடு, மாஸ், பிரியாணி, கஸ்டடி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

அஜித்தை வைத்து 10 ஆண்டுகளுக்கு முன்பே மங்காத்தா என்ற ஹிட் படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து, விஜய்யை வைத்து பிரமாண்ட படம் இயக்கவுள்ளார்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாகவும்,  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், விஜய்68 படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
sjsurya

ஏற்கனவே மாநாடு படத்திலும் விஜய்யின் மெர்சல் படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.

இதனால் இவர் விஜய்க்கு வில்லாக நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.