கமல்ஹாசனை அரசியலுக்கு வரச்சொன்னவர் இவர்தான்

இந்த வாரமும் இரண்டு எவிக்சனா?
Sinoj| Last Updated: புதன், 3 மார்ச் 2021 (15:46 IST)

 

நடிகர் கமல்ஹாசன்  நடிகராக வெற்றி பெற்றுள்ள நிலையில் அரசியலில் ஈட்படு முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். இந்நிலையில் மாற்றத்திற்குத் தயராகிவிட்டார்கள் என்ற  அவரது குரலில் வெளியாகியுள்ள பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

தலைவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில் ஏற்கனவே மக்களவைத் தேர்தலின் போட்டியிட்டிருந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் அக்கட்சி களமிறங்கவுள்ளது.

எனவே திராவிட கட்சிகளை எதிர்த்து நடிகர் சரத்குமாரின் சமக மற்றும் ஐஜேகே கட்சியுடன் இனைந்து மூன்றாவது அணியாகப் போட்டியிடவுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் குரலில் பாடியுள்ள நிமிரட்டு தமிழகம் , தலை நிமிரட்டும் என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் தமிழக மக்கள். ‘பேட்டரி டார்ச்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு களமிறங்கிவிட்டது எம்மவர் படை. தலை நிமிரட்டும் தமிழகம். வெற்றி நமதே! எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அப்துல்கலாவின் ஆலோசகராக இருந்தவர்   பொன்ராஜ். இவர்  நடிகர் கமல்ஹாசன் குறித்து ஒரு முக்கிய தகவல் பகிர்ந்துள்ளார்.


அதில், கொச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும்போது அப்துல்கலாமும், கமல்ஹாசனும் பேசிக் கொண்டு வந்தனர்.

பின்னர், அப்துல்கலாமிடம் நீங்கள் இருவரும் என்ன பேசினீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் கமல்ஹாசனை அரசியலுக்கு வரச்சொன்னேன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்இதில் மேலும் படிக்கவும் :