வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (15:29 IST)

கமல் கட்சியில் இணைந்த அப்துல் கலாமின் ஆலோசகர்!

கமல் கட்சியில் இணைந்த அப்துல் கலாமின் ஆலோசகர்!
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சற்றுமுன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார் 
 
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர பல பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. சமீபத்தில் பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா கமல் கட்சியில் இணைந்தார் என்றும் அவர் வரும் தேர்தலில் கமல் கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன் அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த பொன்ராஜ் கமல் கட்சியில் இணைந்துள்ளார். கமல் கட்சியில் இணைந்த பின் அவர் பேட்டி அளித்தபோது அப்துல் கலாமின் பெயரில் கட்சி ஆரம்பிக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவிடாமல் பாஜக தடுத்ததாகவும் கூறினார். கமல் கட்சியில் இணைந்து நாட்டிற்கு தன்னால் முடிந்த சேவையை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்