திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு இழுபறி!
திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்திற்க்கு சட்டமன்ற தேர்தக் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களின் கூட்டணி தொகுதி உடன்பாடுகளை இறுதி செய்ய வேகம் காட்ட துவங்கியுள்ளனர். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழுவின் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு துணை பொதுச்செயலாளர்கள், ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆர்.எஸ். பாரதி மற்றும் எ.வ.வேலுவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், சௌந்தரராஜன் உள்ளிட்டோர் 1 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகள் கேட்டதாக தகவல், ஆனால் திமுக தரப்பில் 5 முதல் 7 தொகுதிகள் மட்டுமே வழங்கபடும் என கூறியதால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபடாமல் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.