மய்யத்துடன் கூட்டணி அமைத்தது சரத்குமார் கட்சி! – அரசியலில் திருப்பம்!

Kamalhassan
Prasanth Karthick| Last Modified புதன், 3 மார்ச் 2021 (13:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தற்போது மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளது.

இன்று நடந்த சமத்துவ மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து பேசிய அவர் “எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திக்க உள்ளோம்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :