அல்ட்ரா மாடர்ன் இயக்குனர் கௌதம் மேனன்… இப்போது கிராமத்தான் கதையை எடுக்க்ப்போகிறாராம்! கைகொடுக்குமா?

Last Updated: புதன், 16 செப்டம்பர் 2020 (12:54 IST)

இதுவரை நகர்ப்புறத்து கதைகளையே படமாக்கி வந்த இயக்குனர் கௌதம் மேனன் முதன் முதலாக கிராமத்துக் கதை ஒன்றை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதே போல இமை போல காக்க மற்றும் அவர் தயாரிப்பில் உருவான நரகாசுரன் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களும் ரிலிசாக வில்லை. இதற்கெல்லாம் காரணம் அவரின் பொருளாதார சிக்கல்களே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அதிரடியாக இப்போது கிராமத்துக் காதல் கதை ஒன்றை கௌதம் மேனன் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இதுவரை நகரத்தையும் நகரத்துக் காதல் கதைகளை மட்டுமே காட்சிப்படுத்திய கௌதம் மேனனின் இந்த முடிவு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :