வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (21:21 IST)

தனுஷ் பட இயக்குநரின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்...

சினிமாவில் பல தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற நடிகர் விக்ரம். இவர் இரண்டு தேசிய விருதுகளை ப் பெற்று இந்திய அளவில் சிறந்த நடிகராக அறியப்படுகிறார்.

இவரது மகன் துருவ் விக்ரம். இவர் நடித்த வெளியான ஆதித்ய வர்மா கடந்த ஆண்டு வெளியானது.

இந்நிலையில் இவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், துருவ் விக்ரம் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மூன்றாவதாக துருவ் விக்ரம் பரியேறும் பெருமாள் படத்த்ஐ இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிறது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கிவரும் கர்ணன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின் இப்படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.