கௌதம் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் பிரிந்தது ஏன்? எல்லாத்துக்கும் காரணம் இதுதானா?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹேரிஸ் ஜெயராஜ் பிரிந்தது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் அமைந்த பாடல்கள் எல்லாம் இன்றும் இளைஞர்களால் விரும்பிக் கேட்கப்படுபவை. 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வானோலிகள் மற்றும் எப் எம் ஆகியவற்றில் அதிகமாக இவர்களின் படப் பாடல்கள் அதிகமாக ஒளிபரப்பப்பட்டன. இந்நிலையில் வாரணம் ஆயிரம் படத்துக்குப் பின் இருவரும் பிரிந்தனர்.
இதற்கான காரணம் என்னவென்று அப்போது பலவாறாக பேசப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜை தனது மின்னலே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் கௌதம் மேனன். அந்த உரிமையை பயன்படுத்திக் கொண்டு அவர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு அவர் மிகவும் கம்மியான சம்பளமே கொடுத்து வந்துள்ளார். அது மார்க்கெட்டில் ஹாரிஸ் ஜெயராஜின் மார்க்கெட்டுக்கு கொஞ்சம் கூட பொருந்ததாக இருந்ததால் ஹாரிஸ் ஜெயராஜ் அதிருப்தி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் அவர்களின் பிரிவுக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.