ஒரு நிமிடத்தில் எப்படி மனப்பாடம் செய்வது? இர்பான் பதானின் காமெடி வீடியோ

irfan
ஒரு நிமிடத்தில் எப்படி மனப்பாடம் செய்வது?
siva| Last Modified செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (20:18 IST)
இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் ’கோப்ரா’ என்ற படத்தில் விக்ரம் நாயகனாகவும் இதே படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய இர்பான் பதான் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த காமெடி வீடியோவில் ’நான்கு வரி வசனத்தை கொடுத்துவிட்டு ஒரே நிமிடத்தில் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று அஜய் ஞானமுத்து கூறியதாக செல்லமாக குற்றம் சாட்டியுள்ளார்
இந்த வீடியோ தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது. கோப்ரா படத்தில் நடிகராக மாறி இருக்கும் இர்பான் பதான் இன்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :