1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:40 IST)

பஹத் பாசில் நடிக்கும் பாச்சுவும் அல்புத விளக்கும்… போஸ்டரோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.

இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் ‘பாச்சுவும் அல்புத விளக்கும்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அகில் சத்யன் இயக்கியுள்ளார்.

இந்த படம் மும்பையில் செட்டில் ஆன கேரள இளைஞன் ஒருவன் மீண்டும் தன் சொந்த ஊருக்கு செல்லும் அனுபவங்களே இந்த படம் என சொல்லப்படுகிறது.