திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (12:53 IST)

அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

border
நடிகர் அருண் விஜய் நடித்த ‘பார்டர்’ என்ற திரைப்படம் ரிலீஸ் க்கு தயாராகிபல மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அருண் விஜய் நடிப்பில் ஈரம் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்து சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ரிலீஸ் செய்து தள்ளி போய்க்கொண்டே இருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் ஜோடியாக ரெஜினா நடித்த இந்த திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஆண்டு அருண் விஜய் நடித்த ’ஓ மை டாக்’ ’யானை’ மற்றும் ’சினம்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு அருண் விஜய்யின் பார்டர் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாக்கி வரும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் அருண்விஜய் நடித்து வரும் நிலையில் இந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran