ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (11:37 IST)

மீண்டும் வரும் மணி ஹெய்ஸ்ட் நாயகன்! – பெர்லின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Pedro alonso
புகழ்பெற்ற மணி ஹெய்ஸ்ட் (Money Heist) தொடரின் முக்கிய கதாப்பாத்திரமான பெர்லின் தனி வெப் சிரிஸ் விரைவில் வெளியாக உள்ளது.

ஸ்பானிஷில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட் (Money Heist). முதலில் டிவி தொடராக வெளியான இது இரண்டாவது சீசன் முதல் நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெருமளவில் ரசிகர்களை ஈட்டியது. தொடர்ந்து 5 சீசன்கள் ஒளிபரப்பான நிலையில் கடந்த 2021ம் ஆண்டில் இதன் கடைசி 5வது சீசன் முடிவடைந்தது.

இந்த வெப் சிரிஸில் ப்ரொபஸர், நைரோபி, டோக்கியோ என பல கதாப்பாத்திரங்கள் இருந்த நிலையில் அதில் அதிகமான ரசிகர்கள் செல்வாக்கு பெர்லின் கதாப்பாத்திரத்திற்கு இருந்து வந்தது. இதனால் மணி ஹெய்ஸ்ட் தொடர் முடிந்ததுமே பெர்லினுக்கு தனி வெப் சிரிஸ் உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Berlin


தற்போது பெர்லின் வெப் சிரிஸ் வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த வெப் சிரிஸில் பெர்லினாக பெத்ரோ அலோன்சோவே நடித்துள்ளார். ப்ரொபசரின் குழுவில் இணையும் முன்னாள் பெர்லின் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற ப்ரீக்குவல் கதையாக இந்த வெப் சிரிஸ் உருவாகியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாக உள்ள பெர்லின் தொடருக்கான டீசர் ஒன்றை நெட்ப்ளிக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K