செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (22:37 IST)

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு உண்டான பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
 
அதன்படி சற்றுமுன் இந்த படம் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் அடுத்த வாரம் ரிலீஸாகவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
 
தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா, ஜெகன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் கெளதம் மேனன் நடித்துள்ள இந்த படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் குறிப்பாக 'மறுவார்த்தை' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் எனப்து குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது