செவ்வாய், 25 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 25 மார்ச் 2025 (16:31 IST)

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. 350க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் கமர்ஷியல் மற்றும் கதையம்சமுள்ள பரிச்சாட்தமான படங்கள் என மாறி மாறி நடித்துக் கவனம் ஈர்த்து வருகிறார். 73 வயதாகும் அவர் தற்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ரமலான் மாதம் என்பது மம்மூட்டி நடிப்பில் இருந்து விலகி நோன்பு இருந்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னால் சில மலையாள ஊடகங்களில் மம்மூட்டிக்குப் புற்றுநோய் என தகவல்கள் பரவி பீதியைக் கிளப்பின. ஆனால் அதை மம்மூட்டியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். நோன்புக்காலம் முடிந்ததும் மம்மூட்டி விரைவில் தன்னுடைய அடுத்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் மம்மூட்டிக்காக கோயிலில் பூஜை செய்த மோகன்லால் தற்போது அவரது உடல்நிலை குறித்து “மம்மூட்டி என் சகோதரர், நண்பர். அவருக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது. நம் எல்லோருக்கும் இருப்பது போல அவருக்கு சிறு பிரச்சனைதான். அவர் சீக்கிரம் குணமாகி வந்து சினிமாவில் நடிப்பார்” எனக் கூறியுள்ளார்.