திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (16:03 IST)

தனுஷை சந்தித்த மாரி செல்வராஜ் ? – விரைவில் படப்பிடிப்பு !

தனுஷ், மாரிசெல்வராஜ் இணையும் அடுத்த படத்துக்காக இருவரும் அசுரன் படப்பிடிப்பு இடத்தில் சந்தித்துள்ளனர்.

கடந்தாண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அள்விலேயே இருக்கும். அதில் பரியேறும் பெருமாள் முக்கியமான படம். தமிழக மக்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்ட அந்தப்படம். இந்தியன் பனோரமா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றது.

பரியேறும் பெருமாளின் ஏகோபித்த வெற்றி மாரி செல்வராஜை கோலிவுட்டின் முக்கியமான இயக்குனராக்கியுள்ளது. இதையடுத்து மாரிசெல்வராஜ் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தானு தயாரிக்க இருக்கிறார். இந்தப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில் திரைக்கதை அமைக்கும் பணிகளை மாரி செல்வராஜ் மேற்கொண்டு வந்தார்.

தற்போது திரைக்கதை பணிகள் முடிந்துள்ள நிலையில் அசுரன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த தனுஷை சந்தித்து அவரிடம் திரைக்கதை குறித்து விவாதித்துள்ளார். விரைவில் இவர்கள் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.