செவ்வாய், 25 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 மார்ச் 2025 (17:01 IST)

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியல் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், இந்த சீரியல் ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கதாசிரியர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"சிறகடிக்க ஆசை" தொடர் குறித்த பேட்டி ஒன்றில், கதாசிரியர் குரு சம்பத் குமார் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
 
அதில், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடையில் வியாபாரம் செய்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒரு பகுதி தான் "சிறகடிக்க ஆசை" தொடரின் அடிப்படை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த பெண், ஒரு பணக்கார வீட்டில் மருமகளாக சென்றபோது, அவர் சந்தித்த துயரங்களும் துன்பங்களும் தான் தொடரில் சில மாற்றங்களுடன் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்த தொடருக்கு முதலில் "சின்ன சின்ன ஆசை" என்று டைட்டில் வைக்க திட்டமிட்டிருந்ததாகவும், பின்னர் "சிறகடிக்க ஆசை" என்று மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இயக்குனர் குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, முத்து, மீனா கேரக்டர்கள் அனைவரின் மனதிலும் நன்றாக பதிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran