ஒரு வழியா பேட்ச் அப் ஆன ஜிவி - தனுஷ்: வைரல் போட்டோ!

Last Updated: செவ்வாய், 25 ஜூன் 2019 (13:53 IST)
ஆடுகளம் படத்தை அடுத்து 8 வருடங்களுக்கு பிறகு அசுரன் படத்திற்காக தனுஷ் - ஜிவி பிரகாஷ் - வெற்றிமாறன் ஆகியோர் இணைந்துள்ளனர். 
 
வடசென்னை படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் அசுரன்  படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படம் வெக்கை என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த படத்தில் தனுஷுடன், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி  சக்திவேல், நடிகர் கருணாஸின் மகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார் தனுஷ். 
தனுஷுக்கு ஜிவி பிரகாஷிற்கும் இடையே மனகசப்பு ஏற்பட்ட நிலையில், தனுஷ் படத்திற்கு ஜிவி இசையமைக்காமல் இருந்தார். ஆனால், அசுரன் படம் மூலம் இந்த மனகசப்பு உடைந்தது. 
 
இந்நிலையில், ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் பாடலசாரியர் யுகபாரதி வரிகளின் புதிய பாடலை பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 
 
இந்த பதிவோடு, இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் ஒன்றி தனுஷ் மற்றும் ஜிவி சிரித்தப்படி இருக்கிறார்கள். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :