செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (18:01 IST)

எதற்கடி வலி தந்தாய்? – துருவ் விக்ரம் பாடிய ஹிட் பாடல்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளியாகவிருக்கும் ஆதித்யா வர்மா படத்தின் முதல் பாடல் யூட்யூபில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஆதித்யா வர்மா. பாலா இயக்கிய இந்த படம் பல்வேறு காரணங்களால் இடையே நின்று போக, இறுதியாக கிரிசாயா என்பவரது இயக்கத்தில் படம் தயாராகி இருக்கிறது.

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாடலான “எதற்கடி வலி தந்தாய்?” பாடல் யுட்யூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடலை துருவ் விக்ரமே சொந்தமாக பாடியுள்ளார். இதில் வரும் ராப் வெர்சனுக்கு வரிகளை துருவ் விக்ரமே எழுதியும் உள்ளார்.

பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது இந்த பாடல்.