ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (18:51 IST)

அடடே நமீதாவா இது...! நம்பவே முடியலையே...புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்!

2002-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நமிதா பின்னர் 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களால் பேசப்படும் நடிகையாக வலம் வந்தார். 



 
அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இப்படி தமிழக மச்சான்ஸ்களின் மனதில் கூடுகட்டி வாழ்ந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார். 
 
பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை நமீதா  தனது நீண்ட நாள் நண்பர் வீரேந்திர சவுத்ரியை  திருமணம் செய்து கொண்டு அழகான வாழக்கையை வாழ்ந்து வருகிறார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு பெண்கள் பெயரும் எடை கூடுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் நமீதா அப்படியே உல்ட்டாவாக இருக்கிறார். ஆம், தற்போது நமீதான் உடல் எடையை குறைத்து கட்டான தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். 


 
சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அடடே நம்ம நமீதாவா இது நம்ம முடியலையே என்று கூறி புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.