வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (16:31 IST)

’திரெளபதி’ இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான திரௌபதி திரைப்படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே 
 
நாடக காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரௌபதி திரைப்படத்தை ஜி மோகன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு ஒரு சில அரசியல் கட்சிகள் ஆதரவும் ஒரு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த திரைப்படம் வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஜி மோகன் அடுத்த பட தகவல் குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குனர் மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஆயுத பூஜை அன்று 11:32 எனது அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
 
இயக்குனர் மோகனின் அடுத்த படமும் திரௌபதி போலவே சர்ச்சைக்குரிய படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்