இயக்குனராகிறார் நடிகை வரலட்சுமி: டைட்டில் அறிவிப்பு!

varalakshmi
இயக்குனராகிறார் நடிகை வரலட்சுமி: டைட்டில் அறிவிப்பு!
siva| Last Modified ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (10:42 IST)
கடந்த 2012 ஆம் ஆண்டு ’போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 20 படங்களுக்கும் நடித்து முடித்து விட்டார் என்பதும் தற்போது ஒரே நேரத்தில் 8க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நடிகையை அடுத்து இயக்குனராகவும் வரலட்சுமி மாறி உள்ளார். அவர் இயக்கும் முதல் படத்திற்கு ’கண்ணாமூச்சி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்யின் ‘மெர்சல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்ததை அடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில் கதையம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :