1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (18:49 IST)

’ஐஸ்வர்யா முருகன்’: பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டில்

’ஐஸ்வர்யா முருகன்’: பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டில்
ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பன்னீர்செல்வம், அதன் பின்னர் விஜய் சேதுபதி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்த கருப்பன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது இயக்குனர் பன்னீர்செல்வம் தனது அடுத்த படத்தை தொடங்கி உள்ளார் 
 
இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’ஐஸ்வர்யா முருகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் கணேஷ் ராகவேந்திரா என்பவர் இசையமைக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவும், ஜான் ஆபிரகாம் என்பவரின் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது