புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (19:04 IST)

இயக்குனர் ஆகிவிட்டார் தயாநிதி அழகிரி: முதல் பட டைட்டில் அறிவிப்பு

இயக்குனர் ஆகிவிட்டார் தயாநிதி அழகிரி
அஜீத் நடித்த மங்காத்தா உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தவர் தயாநிதி அழகிரி என்பதும் இவர் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பேரன் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இவரது தயாரிப்பில் மேலும் இரண்டு படங்கள் உருவாக இருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இயக்குனராகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
தயாநிதி அழகிரி ஒரு குறும்படத்தை இயக்கி இருப்பதாகவும் ’மாஸ்க்’ என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் இந்த குறும்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது 
 
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது சகோதரரும் நடிகருமான அருள்நிதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தயாநிதி அழகிரி இயக்குனராகி உள்ளதை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகினர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சூரி, நடிகர் சாந்தனு மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் அவருக்கு தொடர்ச்சியாக தனது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் குறும்படத்தை இயக்கிய தயாநிதி அழகிரி விரைவில் திரைப்படத்தையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது