திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 27 ஜூலை 2019 (16:05 IST)

இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்க வேண்டுமா! இதோ ஓர் அறிய வாய்ப்பு!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன்-2'

 
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளனர். இதற்கிடையில் சமீபத்தில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தனர். 


 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது, இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிக்க அனுபவமுள்ள நடிகர் நடிகைகள் தேவை விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு ஒன்று சமூகவலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொண்டு இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.