"பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்" - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Last Updated: சனி, 20 ஜூலை 2019 (16:34 IST)
செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.


 
அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி  இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து  எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி இந்தியன் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக ஒரு பேச்சு இருந்து வருகின்றது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவல் என்னவென்றால்,  அஜய் ஞானமுத்து  இயக்கும் புதுப்படமொன்றில்  ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இந்த தகவல் பிரபல வார இதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
கோலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விக்ரம் உடன் ப்ரியா பவானி ஷங்கர் ஜோடி சேர்ந்து நடிக்கவிருப்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :