சூர்யா கல்விக்கொள்கை குறித்து பேசினாரா? எனக்கு தெரியவே தெரியாது: ஷங்கர்:
நடிகர் சூர்யா சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது புதிய கல்விக் கொள்கை குறித்து தனது ஆணித்தரமான கருத்துக்களை கூறினார்
சூர்யாவின் இந்த கருத்துக்கு ஆளும் அதிமுக தலைவர்களும் மத்தியில் ஆளும் பாஜக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் சூர்யாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்தது. மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்பட பல அரசியல்வாதிகளும், அமீர், ரஞ்சித் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்
இந்த நிலையில் நடிகர் சூர்யா தேசிய கல்வி கொள்கை குறித்து பேசியது எனக்கு தெரியாது என்றும், நான் அதைப் படிக்கவில்லை என்றும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தேசிய கல்வி கொள்கை குறித்து பேசிய கருத்து சமூக வலைதளங்களில் கடந்து நான்கு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சூர்யா கல்விக் கொள்கை குறித்து பேசியதே தனக்கு தெரியாது என்று இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பது கோலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது