செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (14:13 IST)

தலையில் பீர் ஊற்றி நடிகைகளுடன் ராம் கோபால் வர்மா கும்மாளம்: வைரல் வீடியோ!!

இயக்குனர் ராம் கோபால் வர்மா சக்சஸ் மீட்டில் நடிகைகள் மீது பீர் ஊற்றி வெற்றியை கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராம் கோபால் வர்மா. ஆனால், இவர் அவ்வப்போது எதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கமானதுதான். 
 
ஆனால், இம்முறை சற்று வித்தியாசமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றின் வெற்றி விழாவில் பங்கேற்ற இவர் அங்கு நடிகைகள் சார்மி, நாபா நடேஷ், நித்தி அகர்வால் ஆகியோர் மீது பீர் ஊற்றியும், தன் மீது பீர் ஊற்றிக்கொண்டும் கொண்டாடியுள்ளார். 
 
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். ராம் கோபால் வர்மாவின் இந்த செயல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
இதோ அந்த வீடியோ... 

நன்றி: ABN Entertainment