1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (10:51 IST)

இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த பிரமாண்ட படைப்பு...

தழிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநனர்களில் முன் வரிசையில் நிற்பவர் இயக்குநர் பா.ரஞ்சித்  ஆவார். சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க கனவு  கண்டு கொண்டிருப்போர்   மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இரண்டு படங்கள் இயக்கி விட்டார்.
அதன் அடுத்த கட்டமாக கூகை என்னும் நூலகத்தை அவர் வளசரவாக்கத்தில் தன்  நீலம் பண்பாட்டு மையம் சார்பில் திறந்துள்ளார்.
 
விழா தொடங்கியதும் புகழ்ச்சிக்கு, பெருமைகளுக்கும் இடமளிக்காமல் கருத்துக்களுக்கு முதன்மைத்துவம் கொடுப்பவராகவே இருந்தார். அதை தன் பேச்சிலும் வெளிப்படுத்தினார். ரஞ்சித் பேசும் போது, 'என்னை கல்லூரிக்காலத்தில் வழிநடத்தி சென்றது புத்தகங்கள்தான். அதானால் தான் இந்த இடத்தில் நிற்கிறேன் . இப்படி ஒரு நூலகத்தை கட்ட வேண்டுமென்பது எனது எனது கனவு அது தற்போது நிறைவேறி விட்டது' இவ்வாறு அவர் பேசினார்.