திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Updated : சனி, 6 அக்டோபர் 2018 (10:53 IST)

பிக் பாஸை ஓரங்கட்டிய சொப்பன சுந்தரி நிகழ்ச்சி

சன் லைஃப் தொலைக்காட்சிக்கு உயிறூட்டும்  வகையில் அக்டோபர் 7ம் தேதியில் இருந்து 10 மாடல் அழகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.
 

"சொப்பன சுந்தரி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ள  இந்த நிகழ்ச்சி "அமெரிக்காஸ்  நெக்ஸ்ட் டாப் மாடல்" நிகழ்ச்சி போன்று நடத்துகிறார்கள். ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பவுள்ள  இந்த நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் அவர்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று ஒரே வீட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தி யார் அழகி என்று தேர்தெடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்க இருக்கிறார்.
 

 
சமீபத்தில் வெளியான  இதன் ப்ரொமோ வீடியோவில்  சண்டை பலமாக நடக்கிறது. பேச்சு பேச்சாக இல்லாமல் கைகலப்பில் போய் முடிகிறது. இப்படி சண்டை, சர்ச்சை, வாக்குவாதம், அடிதடி, பரபரப்பு என்று சொப்பன சுந்தரி அமோகமாக வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. பிக் பாஸ் கமலை போலவே வார இறுதி நாளில் பிரசன்னா  பஞ்சாயத்து  செய்வார்.

பிக் பாஸ் 2  நிகழ்ச்சியை விட சொப்பன சுந்தரியை பார்க்க நிச்சயம் பெரிய கூட்டம் கூடும் என்று தெரிகிறது.